தென்காசி – ஜீன் -31,2023
newz – webteam



தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார்.IPS, அவர்களின் உத்தரவுபடியும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.T.சாம்சன் IPS மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி IPS ஆகியோர்களின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.தனராஜ் கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் M.ஜோஸ்லின் அருள்செல்வி, உதவி ஆய்வாளர்கள் S.சிவசங்கரி S.செண்பகபிரியா மற்றும் சைபர் கிரைம் காவலர்களின் தீவிர முயற்சியால் தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட தொகை ரூ.9,17,08,500/- ஆகும். இதில் பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்ட தொகை ரூ.31,67,196/- ஆகும். இன்று 30.06.2023 சைபர்கிரைம் மூலம் பணத்தை இழந்த 4 நபர்களின் மொத்த தொகை ரூ.7,28,946/- மீட்கப்பட்டும், மேலும் காணாமல் போன ONE PLUS, OPPO, VIVO, REAL ME, POCO ஆகிய விலை உயர்ந்த 80 எண்ணிக்கையுள்ள சுமார் ரூ.13,00,000/- (பதின்மூன்று இலட்சம்) மதிப்பு உள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.E.T.சாம்சன் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக இதுவரை 533 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.83,00,000/-(என்பத்தி மூன்று இலட்சம்) ஆகும்.
0 Comments