திருநெல்வேலி – ஜீலை -26,2023
newz – webteam
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற இம்முகாமில் 36 பேர் கலந்து கொண்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடத்தில் புகார் மனுக்களை அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் கூறினார்கள். உடன் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் அவர்கள் மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்
0 Comments