கோயம்புத்தூர் – ஜீலை -26, 2023
newz – webteam
கோவை மாவட்டத்தில் கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் நடந்த கொலை, ஆதாய கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போதைப்பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 5719 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 8891 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி – 2023 மாதம் முதல்:
26 கொலை குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 42 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
298 கஞ்சாவழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 401 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.61,16,210/- மதிப்புள்ள 611.821 கிலோ கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் அவர்களிடமிருந்து ரூ.4,33,600/- மதிப்புள்ள செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதை பொருட்களும் ரூ.33,17,900/- மதிப்புள்ள போதை கஞ்சா கலந்த போதை சாக்லேட்டுகளும் உள்ளடங்கும்.
217 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 228 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.31,60,282/- மதிப்புள்ள 2766.930 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிராம்
4310 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 4369 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 6415.555 லிட்டர் (34,350 பாட்டில்கள்) மதுபானங்கள், 7735 லிட்டர் தென்னங்கள் மற்றும் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 258 குற்றவாளிகள் மீது 263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.4,90,080/- மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.12,42860/- பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 810 குற்றவாளிகள் மீது 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.15,83,710/- பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
326 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 444 திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.4.24,54,690/- மதிப்புள்ள திருட்டு சொத்துக்களான 450 சவரன் நகை, 46 வாகனங்கள் மற்றும் ரூ.1,82,93,080 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிராக 116 பாலியல் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 116 குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்பட்டு அதில் 128 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 58 வழக்குகள் நீதிமன்ற விசாரனை கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 08 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டள்ளது.
பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 25 குற்றவாளிகள், தொடர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி வந்த 04 குற்றவாளிகள், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 06 குற்றவாளிகள், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 07 குற்றவாளிகள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 08 நபர்கள் உட்பட மொத்தம் 25 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் கோவை மாவட்டத்தில் களவு போன சுமார் ரூ.8,41,000/- மதிப்பிலான 511 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது (மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தனிப்படை அமைக்கப்பட்டு ரூ2,32,87,900/- மதிப்பிலான 1265 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட காவல்துறை மூலம் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 2281 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடம் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவிகளுக்கு தங்களை தாக்கவரும் கயவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.
இன்று 26.072023 Mission Kaloori_ Drug Free Kovai என்ற திட்டம் தொடங்கப்பட்டு 126 கல்லூரி சேர்ந்த மாணவர்களுக்கு மத்தியில் போதை பொருட்கள் பயன்பாட்டில் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவல் அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம்
ஒவ்வொரு கல்லூரியிலும் காவல்துறையினர், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கொண்ட Anti Drug Clubs உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. போதை பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்யோகமாக WhatsApp Help Line No 90033 51100 என்ற எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அறிமுகப்படுத்தி அதன் மூலம் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் பிரவின் சங்கர், ஏர்டெல் மண்டல மேலாளர், ரகுநாத், ஏர்டெல் மாவட்ட மேலாளர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments