தூத்துக்குடி – ஜீலை – 26,2023
newz – webteam
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 05.08.2023 அன்று வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் ஆகியோர் பேரலாய வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தூய பனிமய மாதா ஆலய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருநெல்வேலி சரக துணை தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இத்திருவிழாவை முன்னிட்டு 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 34 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் இத்திருவிழாவில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இந்த திருவிழாவில் திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ரகசியமாக கண்காணிக்க 110க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் சாதாரண உடையில் பொதுமக்களோடு மக்களாக கலந்து ஆங்காங்கே தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆங்காங்கே 50 சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற 05.08.2023 அன்று தங்கத்தேர் பவனி நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அதிக கூடும் முக்கிய இடங்களிலும் எந்தவித அசாம்பாவிதமும் நிகழா வண்ணம் முன்னேற்பாடு நடவடிக்கைகள் காவல்துறை சார்பாக செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் தங்க நகைகளை அணியும்போது உடைகளுடன் சேர்த்து ஊக்கு போன்றவற்றால் பின் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மேற்படி குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க காவல்றையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம் சத்தியராஜ், கோவில்பட்டி வெங்கடேஷ், மணியாச்சி லோகேஸ்வரன், சாத்தான்குளம் அருள், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், ஆயுதப்படை புருஷோத்தமன், மாவட்ட குற்றப் பிரிவு ஜெயராம் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments