தூத்துக்குடி – மே -11,2023
newz – webteam
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது உற்சவ திருவிழா வருகிற 12.05.2023 முதல் 14.05.2023 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. மேற்படி நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று (11.05.2023) ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 68 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திருநெல்வேலி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தென்காசி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம், விருதுநகர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments