ஆவடி -ஜீன் -06,2024
Newz -webteam
ஆவடி காவல் ஆணையரகம், மத்திய குற்ற பிரிவில் .கோபி கிருஷ்ணன் த/பெ ராகவ ரெட்டியார், புருஷோத்தமன், த/பெ ராகவ ரெட்டியார், கோடம்பாக்கம், சென்னை-24 என்பவர்கள் 02.05.2024 தேதி கொடுத்தப் புகார் மனு சம்மந்தமாக நிலப் பிரச்சனை தீர்வுப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், கொரட்டூர் A கிராமத்தில் 4 ஏக்கர் 10 சென்ட் நிலத்தினை மனுதாரர்களின் தந்தை ராகவ ரெட்டியார் மற்றும் தாயார் ராஜேஸ்வரி இருவரும் வெங்கடசாமி ரெட்டியார் என்பவரிடமிருந்து 1974 ம் ஆண்டு கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளனர். அதன்பின்னர் மனுதாரர்களின் பெயரில் கடந்த 25.04.2012 ம் தேதி அன்று செட்டில்மென்ட் பத்திரம் செய்து கொடுத்து மனுதாரர்கள் அனுபவத்தில் இருந்து வந்துள்ளது.
மனுதாரர்கள் மேற்படி நிலத்திற்கு வில்லங்கச்சான்று போட்டு பார்த்தபோது சம்பூரணம் என்பவர் தனது மகள்களாகிய புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் பெயரில் 26.03.2022 ந் தேதி அன்று விடுதலைப்பத்திரம் மூலம் போலியான ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளது தெரியவந்தது.
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கொடுத்தப்புகாரின் மீது நிலப்பிரச்சனை தீர்வுப்பிரிவு ஆய்வாளர் லதா மகேஷ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் I.P.S., மற்றும் காவல் துணை ஆணையாளர் பெருமாள், I.P.S., உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தலைமறைவாக இருந்த நண்பர்களான புஷ்பா பெ/வ 49, க/பெ தயாளன், TNHB காக்களூர் கிராமம்,
திருவள்ளூர் மாவட்டம் தனசேகர் வயது 33, த/பெ தயாளன்,TNHB காக்களூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டம் என்ற இரண்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டுதலைமறைவு எதிரிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு,
நிலப்பிரச்சனை தீர்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும்அவர்களது குழுவினரை ஆவடி காவல் ஆணையாளர்
அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
0 Comments