ஆவடி -ஜீன் -06,2024
Newz -webteam
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு, நில பிரச்சனை தீர்வு பிரிவில் புகார்தாரர் மொகிதீன் பாத்திமா பீவி, க/பெ காதர் இப்ராகிம், மடுவாங்கரை, கிண்டி, சென்னை என்பவர் கொடுத்த புகாரில் கொரட்டூர் கிராமம், கள்ளிகுப்பம் ஹாஜி நகர் மனை எண்.71- ல் அடங்கிய 2347 சதுர அடி கொண்ட காலி மனையை திரு.எழுமலை நாயக்கர் மற்றும் தனசேகர் ஆகியவர்களிடமிருந்து கிரையம் பெற்றுள்ளார்.
பத்மநாபன் என்பவர் இதர நபர்களுடன் கூட்டு சேர்ந்து புகார்தாரரின் சொத்தை அபகரிக்க திட்டமிட்டு புகார்தாரர் .மொகிதீன் பாத்திமா பீவி போல் ஆள்மாறாட்ட நபரை ஏற்பாடு செய்து தனது பெயருக்கு போலியான பொது அதிகார பத்திரம் தயார் செய்து அதை பதிவு செய்துள்ளார். போலியான பொது அதிகார பத்திரத்தை வைத்து பாலகிருஷ்ணன், பிரபு, வேலு ஆகியவர்களுக்கு கிரைய விற்பனை செய்து கொடுத்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள புகார்தாரரின் இடத்தை அபகரித்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து நில பிரச்சனை தீர்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் அவர்கள் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ,மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள். இ.கா.ப மற்றும் கூடுதல்
காவல் துணை ஆணையாளர் ஆகியோர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர்களின் தலைமையில் மோசடியில் ஈடுபட்ட வந்த நபர்களை தேடி வந்த நிலையில் இன்று பத்மநாபன்,49 த/பெ.ஜெயராமன்.
சோலைமாநகர்.செங்குன்றம்.
என்பவரை கைது செய்து விசாரணைக்கு பிறகு நீதிமன்றகாவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பத்மநாபன் பி.ஜே.பி கட்சியில் சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவராக பொறுப்பில்
இருப்பது விசாரணையில் தெரியவருகிறது.
இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு வழக்கின்குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு நிலப்பிரச்சனைதீர்வு பிரிவு-2 காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை ஆவடிகாவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்
0 Comments