ஆவடி – ஜீன் -05,2024
Newz -webteam
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் திருமுல்லைவாயல், S.M.நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.
இக்குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையளார் .சங்கர், இ.கா.ப., பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து 50 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் முகாமில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
இக்குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன் கிழமையும் நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகள் மூலமாக துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்
0 Comments