சென்னை – செப் -06,2023
newz – webteam
அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு-2023 19.08.2023 முதல் 21.08.2023 வரை டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டித் தேர்வில், திருவண்ணாமலை மாவட்ட ஒரு விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் . J. தேவிபிரியா கலந்துகொண்டு 250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதை பாராட்டும் விதமாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத் தலைவர், அவர்கள் மேற்படி போட்டித் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த திருமதி. J. தேவிபிரியா அவர்களை அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இவர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் ப. ஜெய்சங்கர் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments