சென்னை – அக்-01,2023
newz – webteam
8 மாதத்தில் 9634 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது மற்றும் 17330 கிலோ கஞ்சா பறிமுதல்
போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத கடத்தனுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் தொடரச்சியாக கடந்த 12:09,221 முதல் 28.09.2023 வரை,மாநிலம் முழுவதும் 8 பெண்கள் உட்பட 223 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 40 இலட்சம் மதிப்புள்ள 386 கிலோ கஞ்சா, 85 கிராம் மெத்தாபிடமின், 690 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் வரை மாநிலம் முழுவதும் 6824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 812 வெளிமாநில குற்றவாளிகள் உட்பட மொத்தம் 9634 போதைப் பொருள் குற்றவாளிகளை கைதுசெய்து அவர்களிடமிருந்து 17330 கிலோ கஞ்சா, 726 கிராம் ஹெராயின். 24311 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2304 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 5 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 137 தடுப்புக்காவல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும், 94984 – 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல் – புகைப்படம் மூலமாகவும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டத்திற்கும் பிரத்யேக் வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் மது விலக்கு தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
0 Comments