சென்னை -ஜீன் -16,2024
Newz -webteam
அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி 2024. சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் . சங்கர் ஜிவால், இ.கா.ப நேற்று தொடங்கி வைத்தார்
இப்போட்டிகள் 16.06.2024 முதல் 19.06.2024 வரை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் மத்திய காவல் அமைப்பினர் என 30 அணிகளை சார்ந்த சுமார் 453 துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள்.
போட்டியின் முதலாவது நாளான இன்று (16.06.2024)
1 கைத்துப்பாக்கி சுடும் போட்டி எண்.1 15 கஜம் ஸ்குவாட்டிங் போட்டியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை உதவிஆய்வாளர் துர்கா இரண்டாவது இடத்தையும். அசாம் காவல்துறை வீராங்கனை காவலர் இட்டு புயான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
2 ரைபிள் சுடும் போட்டி எண். I-100 கஜம் ஸ்டான்டிங் போட்டியில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை வீராங்கனை வெர்சா ரவாத் முதல் இடத்தையும், குஜராத் காவல்துறை வீராங்கனை நிமிஷாபென் கே ராவாலியா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமைக் காவலர் ராதிகா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
- கைத்துப்பாக்கி சுடும் போட்டி எண்.II do 25 கஜம் குயிக் ரிஃப்ளெக்ஸ் போட்டியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர்
பாராமிலா முதல் இடத்தையும். எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை
காவலர் மீனாக்ஷி சந்தர் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை
வீராங்கனை தலைமைக் காவலர் க.பாரதி மூன்றாவது இடத்தையும்
பிடித்தனர். - ரைபிள் சுடும் போட்டி எண்.II. 200 களும் நீலிங் போட்டியில், அசாம்
ரைப்பிள்ஸ் வீராங்கனை காவலர் மட்டா வதி சாந்தி பால் முதல்
இடத்தையும், எல்லைப் பாதுகாப்புப் படை வீராங்கனை காவலர் சுனிதா
இரண்டாவது இடத்தையும், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படைவீராங்கனை நிர்மலா தாரகி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
0 Comments