திருநெல்வேலி – பிப் -15,2025
Newz – Webteam



திருநெல்வேலி சரகத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட , கஞ்சாவை திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டன.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் பொருட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்திருந்தன.
திருநெல்வேலி சரக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா திருநெல்வேலி சரக டிஐஜி . மூர்த்தி., இ.கா.ப., தலைமையில் காவல்துறை சரகம் போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன்., நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார்., இ.கா.ப.,, தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் அருள், தென்காசி மாவட்ட மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமார்,
திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மற்றும் திருநெல்வேலி தடயவியல் நிபுணர் மினிதா (பொறுப்பு) ஆகியோரின் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.
0 Comments