நாகபட்டினம் – ஜன -06,2024
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பானையும் காவல் நிலையப் பகுதிகளில் கடந்த 27.12.2023 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள்” என்ற நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைப்பெற்றது. மேற்காண்ட நடைபயனம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்துமுடிந்தன.
இந்நிலையில் மேற்கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வெள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றி் வந்த உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர், கார்த்திகேயன் ஆகியோர் பா.ஐ.க கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவதற்கு அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு காவல் சீருடையுடன் சென்று, தங்களது கைபேசி மூலம் அக்கட்சியில் இணைவதற்கு நின்று கொண்டிருந்ததாக, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இச்செய்தி மற்றும் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் மேற்படி காவல் அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பணியினை விட்டுவிட்டு பா.ஜ.ககட்சியின் சார்பில் புதிய உறுப்பினர்கள் இணைவதற்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடைக்கு காவல் சீருடையில் சென்றுள்ளனர் என்றும், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அந்நிழற்குடையில் இருந்தவர்களிடம் பா.ஜ.க கட்சியில் இணைவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார் என்றும். அதற்கு அவர்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் தனது கைபேசியிலிருந்து பி.ஜே.பி கட்சியில் சேருவதற்கான எண்ணான 8980806080 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார் என்றும், அதன்பின் அன்றே VM-BJPMEM என்ற இரண்டு குறுஞ்செய்திகளைப் பெற்றுள்ளார் என்றும், மேற்படி செயல்பாடுகளுக்கு இவருக்கு துணையாக கார்த்திகேயன் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் இருந்துள்ளார் என்றும்தெரியவந்தது.
இச்செயலானது காவல் அலுவலர் எவரும் தாங்கள் அரசுப் பணிகளில் இருக்கும்போது
எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராவதோ வேறு வகையில் தொடர்புடையவராவதோ
கூடாது எனக் கூறும் தமிழ்நாடு சார்நிலைக் காவல் அலுவலர்கள் நடத்தை விதிகள், 1964-ன்விதி18(1)-ஐ மீறிய செயலாகும். எனவே, மேற்படி இருகாவல் அலுவலர்களும் மேற்கூறிய
நடத்தை விதிகளை மீறியதாலும், அவர்களுக்கு கொடுத்த பணியினை சரிவரச் செய்யத்தவறியதாக உறுதியாகத் தெரியவந்ததால் தஞ்சாவூர் காவல் சரக டிஐஜி 30.12.2023 அன்று அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.
மேலும், இவர்களுடைய செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள நாகப்பட்டினம் டி.எஸ்.பி.க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தொடர்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
0 Comments