தூத்துக்குடி – டிச -13,2023
Newz – webteam
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 9 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 182 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி இ.ஆ.ப அதிரடி நடவடிக்கை.
கடந்த 13.11.2023 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மணி (60) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர்களான துரைபாண்டி மகன்களான லெட்சுமணன் (எ) லெச்சார் (43), சங்கரசுப்பு (40), குமாரசாமி மகன்களான சீனிபாண்டி (31), பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி (35), துரைராஜ் மகன் ராமையா (எ) பழனி (45), ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்களான சுந்தரம் மகன் இசக்கிமுத்து (எ) பாபுஜி (21), முருகன் மகன் மாரி (எ) மதன் (22), மணக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரசுப்பு மகன் இசக்கிமுத்து (36) மற்றும் மணக்கரை ஆர்.சி தெருவை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் மாரியப்பன் என்ற மாரியரசு (33) ஆகிய 9 பேரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான லெட்சுமணன் (எ) லெச்சார், சீனிபாண்டி, இசக்கிமுத்து (எ) பாபுஜி, பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி, மாரி (எ) மதன், சங்கரசுப்பு, இசக்கிமுத்து, ராமையா (எ) பழனி மற்றும் மாரியப்பன் (எ) மாரியரசு ஆகிய 9 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் துணை கண்காணிப்பாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி இ.ஆ.ப மணக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர்களான துரைபாண்டி மகன்களான 1) லெட்சுமணன் (எ) லெச்சார், 2) சங்கரசுப்பு (40), குமாரசாமி மகன்களான 3) சீனிபாண்டி, 4) பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி, துரைராஜ் மகன் 5) ராமையா (எ) பழனி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு தோழப்பன்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர்களான சுந்தரம் மகன் 6) இசக்கிமுத்து (எ) பாபுஜி, முருகன் மகன் 7) மாரி (எ) மதன், மணக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரசுப்பு மகன் 8) இசக்கிமுத்து மற்றும் மணக்கரை ஆர்.சி தெருவை சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் 9) மாரியப்பன் என்ற மாரியரசு ஆகிய 9 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைத்தார்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 நபர்கள் உட்பட 182 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments