
தென்காசி – டிச -13,2023
newz – webteam
- அருளாட்சி பகுதியில் அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் சிறையில் அடைப்பு
வாசுதேவநல்லூர் அருகே அமைந்துள்ள அருளாட்சி பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவருக்கும் இடையே ஆறு மாத காலமாக குடிநீர் குழாய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று சரவணன் மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்ற போது அங்கு வந்த வெள்ளத்துரை அரிவாளால் சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சரவணன் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் அவிவினா விசாரணை மேற்கொண்டு மேற்படி லட்சுமண பாண்டியன் என்பவரின் மகன் வெள்ளத்துரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்..- மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் சிறையில் அடைப்பு
சொக்கம்பட்டி அருகே அமைந்துள்ள புன்னையாபுரம் பகுதியில் சார்பு
ஆய்வாளர் திரு.உடையார்சாமி அவர்கள் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட புன்னையாபுரம் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ் (25), ராமர் என்பவரின் மகன் மாரிமுத்து (28), திருமலைவேல் என்பவரின் மகன் முத்துப்பாண்டி (53) மற்றும் மேல திருவேட்ட நல்லூர் பகுதியை சேர்ந்த வேல் என்பவரின் மகன் திருப்பதி (28) ஆகிய நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..- மேலபாட்டாகுறிச்சி பகுதியில் வீட்டில் வைத்திருந்த விறகுக்கு தீ வைத்த நபர் சிறையில் அடைப்பு
சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்கைகுட்பட்ட மேலபாட்டாகுறிச்சி பகுதியில் வசித்து வரும் ஹரி கிருஷ்ணன் என்பவரின் மனைவி சமையலுக்காக வீட்டின் வெளியே இருந்த விறகுகளை எடுக்க சென்றபோது குடிபோதையில் அங்கு வந்த ஹரி கிருஷ்ணனின் சித்தப்பாவான சித்திரைகுமார் என்பவர் ஹரிகிருஷ்ணளின் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். பின்னர் மீண்டும் இரவில் ஹரி கிருஷ்ணவின் வீட்டிற்கு வந்த சித்திரைகுமார் வீட்டின் வெளிய இருந்த விறகுக்கு தீ வைத்து சென்றுள்ளார். இது குறித்து ஹரி கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ஜெய்சங்கர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி மேல பாட்டாகுறிச்சி பகுதியை சேர்ந்த சித்திரை குமார் (49) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்..
இன்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், B.B.,
உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டம்முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர்
கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 15 இடங்களில் காவல்
துறையினர் ஏற்படுத்தினர்..
0 Comments