திருப்பத்தூர் -ஜீலை -04,2024
Newz – webteam
விபத்துக்கள் குறைக்கும் பொருட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒலி ஒளி எழுப்பும் அறிவிப்பு டவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., நேரில் ஆய்வு செய்து திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பச்சூர் பகுதியில் அதிகமாக விபத்து நடக்கிறது என கண்டறியப்பட்டு விபத்துகளை குறைக்கும் பொருட்டு
அவ்விடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மூலம் அமைக்கப்பட்ட ஒலி ஒளி எழுப்பும் அறிவிப்பு டவரை நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
அப்பொழுது நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் உடன் இருந்தனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
0 Comments