திருநெல்வேலி -ஜீலை – 04,2024
Newz – webteam

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து கைது செய்த திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாயாண்டி (58) என்பவரிடம் கேரளா மாநிலம், சித்தாராவை சேர்ந்த ரெஜின் (55) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி போலியான விசாவை தயார் செய்து கொடுத்து ரூபாய் 10 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேற்படி எதிரி மீது நடவடிக்கை எடுக்க மாயாண்டி என்பவர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததன் பேரில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,உத்தரவின்படி, மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளர் . பொன்.ரகு (பொறுப்பு), மேற்பார்வையில்,
மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ப.முத்து தலைமையிலான தலைமை காவலர்கள் ஜான்போஸ்கோ, முத்துராமலிங்கம், ஆனந்தராஜ் ஆகியோர் எதிரியை கைது செய்ய தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, வெவ்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வருவதாக தெரியவந்தது.
பின் ரெஜின் மும்பையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் மும்பை சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு எதிரியான ரெஜினை கைது செய்து 04.07.2024 இன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் பணமோசடி செய்து ஏமாற்றி பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்த எதிரியை சிறப்பாக செயல்பட்டு கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., வெகுவாக பாராட்டினார்.
0 Comments