ஜீலை -08,2024
Newz – webteam
கடல் சீற்றங்களின் போது பொதுமக்களை மீட்க காவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் லெமூர் கடற்கரைப் பகுதியில் நடந்த சம்பவங்கள் போன்று இயற்கை பேரிடர் காலங்களில் மற்றும் கடல் சீற்றங்களின் போது மீண்டும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS இன்று கன்னியாகுமரியில் துவக்கி வைத்தார்.
சென்னையை சேர்ந்த “Standup Marina” என்ற அமைப்பிலிருந்து சதீஸ் மற்றும் குழுவினர் இப்பயிற்சியினை அளித்தார் . இதில் கடல் அலையில் சிக்கிய நபர்களை எவ்வாறு மீட்பது, மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி அளிப்பது சம்பந்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இன்று மட்டும் 15 பேர் இப்பயிற்சி பெற்றுக் கொண்டனர். இப்பயிற்சியினை சிறந்த முறையில் கற்று பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பதில் சிறந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்
0 Comments