அரியலூர் – அக் -25,2024
Newz -webteam
காவலர் வீரவணக்கநாளை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி
அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அருள்முருகன் அவர்கள் வழிகாட்டுதலின்படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில் அரியலூர் அண்ணாசிலை அருகே இன்று காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவங்கி வைத்தார் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் இளங்கிள்ளி வளவன் உடன் இருந்தனர்.
இந்த கண்காட்சியில் தமிழக காவல்துறையில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் நவீன காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்துப்பாக்கிகள் , ரைஃபில்கள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் கட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டு களித்தனர். இந்த ஆயுதங்கள் குறித்தும், அதன் வரலாறு மற்றும் அதன் பயன்பாடு குறித்தும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு.அகமது உசேன் மற்றும் காவலர்கள் விளக்கம் அளித்தனர்.
0 Comments