தூத்துக்குடி – டிச -03,2024
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப வருடாந்திர ஆய்வு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப இன்று புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
மேலும் காவல் நிலைய போலீசார் மற்றும் வரவேற்பாளரிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை ( Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டி, வளாகப் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
0 Comments