தூத்துக்குடி -ஜீலை -11,2024
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 314வது ஜெயந்தி விழாயை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து மேற்பார்வையிட்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியில் இன்று வீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 314வது ஜெயந்தி விழா நடைபெற்றுவருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கட்டாலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிகழ்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . வசந்தராஜ், மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராமகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments