கோயம்புத்தூர் – ஜீன் – 09,2025
Newz – Webteam



இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு: கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு
கேஸி சாவடி காவல் நிலைய காவலர்களால் இரவு ரோந்து பணியின்போது மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில், சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பி ஓட முயன்ற இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்களிடம் கையுறை, இரண்டு செல்போன்கள் மற்றும் ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட திருட்டு குற்றங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் விசாரணையில், அவர்கள் KG சாவடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடமிருந்து ஒரு செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் நேர்த்தியுடன் செயல்பட்டு திருடர்களை கைது செய்த கேஜி சாவடி காவல் நிலைய போலீசாரின் பணியை பாராட்டும் வகையில், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை சந்தித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர்களது சீர்மிகு பணியை பாராட்டினார்.
0 Comments