திருநெல்வேலி -அக் -26,2024
Newz -webteam
சுப்பையா வயது 57, இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர் . 21.10.2024 அன்று வழக்கம்போல் காவலர் பணியை முடித்து விட்டு வீடு திரும்பும்போது சுமார் 10.00 மணி அளவில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஸ்ரீராம் மில்ஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முதலுதவிற்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
மற்றும் மேல் சிகிச்கைகாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் இரத்த கசிவு இருப்பதாகவும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறிய பின்னர் . அதன் பின்பு 24.10.2024 அன்று மூளையில் செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பரிசோதனை அறிக்கையில் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்பதை மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர் அதன் பின்பு அவரது உறவினர்கள் தமாக முன் வந்து அவருடைய கல்லீரல், சிறுநீரகம் தோல் கருவிழிகள் தானமாக அளிப்பதற்கு முன்வந்தனர். 25.10.2024 அன்று அவரது உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு .சுப்பையா உடலை அவரது உறவினர்கள் வேண்டுகோள் படி 26.10.2024 அன்று சுமார் 9.00 மணி அளவில் பெற்றுகொள்வதாக கேட்டுகொண்டனர்.
அதன் அடிப்படையில் உடலுக்கு மலர் மாலை வைத்து அரசு மரியாதை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
0 Comments