திருநெல்வேலி – ஜீன் -02,2024
Newz – webteam
கடந்த 31ம்தேதி சுமார் 8.30மணியளவில் ஆட்டோ பயணித்து கொண்டிருந்த மகாராஜன் 49 வயது, ஆறுமுகநேரி போலீஸ் செக் போஸ்ட் அருகில் உள்ள பாலத்தில் அருகில் செல்லும் போது முன் இருக்கை இருந்த மகாராஜன் ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
9. மணியளவில் காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை முதலுதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்த உறவினர்கள் மேற்படி சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 01.06.2024-ஆம் தேதி சுமார் மாவை 5:30 மணியளவில் அனுமதித்தோம்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய மூளை செயல்பாட்டில் இல்லை என்பதை எடுத்துரைத்தனர். பின்பு மகாராஜன் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள், உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்பு அவருடைய தோல், கிரேஸ் கெனட், மதுரை, தனியார் மருத்துவமனைக்கும், இரு கருவிழிகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
0 Comments