திருச்சி – பிப் -16,2024
Newz – webteam
ஏசி மெக்கானிக்கை வீண் தகராறு செய்து கத்தியால் வெட்டி கொலை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை்கை .
காமினி, இ.கா.ப., உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு கொலை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்
கடந்த 31.12.2023-ந்தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சதிடல் ரயில்வே நிலையம் அருகில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில் பொன்மலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் மேற்படி இறந்துபோன நபர் ஏசி மெக்கானிக்காக கோயம்புத்தூரில் வேலை செய்து வருவதாகவும்,
அவரை வீண் தகராறு செய்து, கத்தியால் வெட்டி கொலை செய்த மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த சதிஷ் என்ற ஊல சதிஷ் வயது 23, த.பெ.கருப்பசாமி மற்றும் ஒரு நபரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சதிஷ் @ ஊல சதிஷ் என்பவர் பொது அமைதிக்கு தொல்லை கொடுப்பவர் என்றும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் .காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை
தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம்
ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மாஜி ராணுவ காலனியை சேர்ந்த
ஸ்டான்லி டென்னிஸ் என்பவரை திருச்சி மாநகர காவல் ஆணையரின்
ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகரில் இதுபோன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது
சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல்ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments