திருப்பத்தூர் – நவ -02,2023
newz – ameen
வெளிநாட்டில் சிக்கி தவித்த பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மனிதநேயமிக்க செயல்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இகா.ப, அவர்களின் தலைமையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி 25.10.2023 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் ஆம்பூர் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த நவாப் பாஷா என்பவர் தனது மனைவி ஹீனா பேகம் வயது 31 என்பவர் கடந்த 23,10.2023 அன்று சவுதி அரேபியா கத்தாருக்கு வேலைக்கு சென்றதாகவும் அங்கு அவரால் வேலை செய்ய முடியாமல் சிக்கித் தவிப்பதாகவும் மேலும் அவரை மீட்டுத் தரும்படி மனு அளித்திருந்தார்
மனுவின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து எடுத்த முயற்சியின் பலனாக இந்திய தூதரகத்தின் உதவியால் மேற்படி நாட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மீண்டும் அவர் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டார்.
0 Comments