புதுக்கோட்டை – டிச -07,2023
newz – webteam
கடவுள் சிலைகளை வைத்து மோசடி செய்த கும்பல் கூண்டோடு கைது.
3 உலோக கடவுள் சிலைகள் மீட்பு,
சமீப காலமாக சென்னை, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் சட்ட விரோத கும்பல்கள், உலோக கடவுள் சிலைகளை வைத்து பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவல்களையடுத்து, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், இகா.ப. உத்தரவுப்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ. பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் சமீம்பானு, உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை கடந்த 15- நாட்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் திருச்சி, கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மாறு வேடங்களில் தகவல் சேகரித்து தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் பயனாக புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகரத்தில் சிலர் ரூ.10 கோடிக்கு சில சிலைகளை விற்பதற்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைக்கபெற்றது. அதன்படி தனிப்படையினர் புதுக்கோட்டை மாலையீடு ரவுண்டான அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்து 4 நபர்கள்: பத்மநாபன், புஷ்பராஜ், ராமச்சந்திரன், மண்ணையா ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் காருக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 1 அடி உயரமுள்ள கஜசம்ஹார மூர்த்தி சுமார் 15 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன், சுமார் 3/4அடி உயரமுள்ள உஷிநிஷ விஜயதாரணி அம்மன் புத்த மதத்தை சேர்ந்த பெண் தெய்வம்-நேபாள், திபெத் நாடுகளில் வணங்கக்கூடிய தெய்வம் ஆகிய 3 சிலைகளை வைத்திருப்பது தெரிந்தது மேலும், அவர்கள் வைத்திருந்த 3 சிலைகளுக்கும் சரியான ஆவணங்களோ அல்லது எந்த ஓர் முகாந்திரமோ கூறவில்லை. எவ்வாறு இந்த 3 சிலைகள் எப்படி கிடைத்தது என்று விசாரித்தபோது திண்டிவனத்தை சேர்ந்த ராஜசேகர், சந்திரசேகர் கடலூரை சேர்ந்த ஹரிபிரசாத், திருமலை, மகேந்திரன், மகாபலிபுரத்தை சேர்ந்த கோபிநாத், கோகுல் மற்றும் பொண்ணுலிங்கம் ஆகியோர்கள் கொடுத்தாக கூறினர். மேற்படி அவர்களது
முகவரி மற்றும் சிலைகளை வைத்திருந்ததற்கான ஆவணங்களை கேட்டபோதுமுன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தவர்களை கைது செய்து அவர்களிடம்இருந்த 3 சிலைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரையும் விசாரணையின் பொருட்டு கைப்பற்றியும், மேற்படி சம்பவம் தொடர்பாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டு,கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். எவ்வாறு மேற்படி சிலைகள் மேற்படி நபர்களுக்கு கிடைத்தது என்றும் மற்ற விவரங்களை கண்டறியும் பொருட்டும் விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது.
மிகச்சிறப்பாக செயல்பட்டு, சிலைகளை வைத்து மோசடி செய்த கும்பலை கைது செய்து 3 சிலைகளை மீட்ட தனிப்படையினரை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், இ.கா.ப. வெகுவாக பாராட்டினார்
0 Comments