தூத்துக்குடி – டிச -08,2023
newz – webteam
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று திடீர் ஆய்வு.
தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊரக உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், புதியம்புத்தூர், தட்டப்பாறை, மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் அலுவலக போலீசாருக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கி, உட்கோட்ட அலுவலக வளாகம் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் உட்கோட்ட அலுவலக காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments