புதுக்கோட்டை – மே-31,2024
Newz – webteam
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் உட்கோட்டத்தில் உள்ள இலுப்பூர், காரையூர், விராலிமலை, அன்னவாசல் ஆகிய பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில்… புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS உத்தரவின் பேரில்…
இலுப்பூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் முத்துராஜா வழிகாட்டுதலின் படி….அன்னவாசல் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் த.லதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட்,செந்தில்குமார் பிரபாகரன் பிரவின் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு..100 க்கும் மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் கன்னியாகுமரியை சேர்ந்த லதா நாடாச்சி,மதுரையை சேர்ந்த ராமு, கார்த்தி மற்றும் சாமுவேல் ஆகிய நான்கு பேர் சேர்ந்து களவில்ஈடுப்பட்டது தெரியவந்தது மேற்படி குற்றவாளிகள் நான்கு பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்து 40 நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்
0 Comments