திருநெல்வேலி – அக் -10,2024
Newz -webteam
தாழையூத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவியை கொல்ல முயன்ற 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் 2011 ஆம் ஆண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி கிருஷ்ணவேனியை கொலை செய்ய முயற்சி செய்த 6 பேருக்கு, திருநெல்வேலி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதத்தையும் விதித்து பரபரப்பான தீர்ப்பளித்தது.
2011 ஆம் ஆண்டு கிருஷ்ணவேனி, தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக இருந்தபோது, பெண்களுக்கான கழிப்பறை அமைக்க தீர்மானித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடக்கு தாழையூத்து ஜக்கம்மாள்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிலர் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. 2011 ஜூன் 13 அன்று, சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், சந்தனமாரி, சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவின்ராஜ், விஜய் ராமமூர்த்தி, நடராஜன் ஆகியோர் கிருஷ்ணவேனியை கொலை செய்ய முயற்சி செய்தனர். அருவாளால் தாக்கியதில் அவர் கடுமையாக காயமடைந்தார்.
இதுகுறித்து தாழையூத்து போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். வழக்கு விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, 10.10.2024 அன்று நீதிபதி கரேஷ்குமார், சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவின்ராஜ், விஜய் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்தார். பிரவின்ராஜ் ரூபாய் 1.10,000 அபராதமும், மற்றவர்களுக்கு தலா ரூபாய் 1.30,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், ராமகிருஷ்ணன் மற்றும் சந்தனமாரி விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த தாழையூத்து போலீசாரை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
0 Comments