சென்னை – செப் -15,2023
newz – webteam
மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலையத்தில் கடந்த 07.08.2023 அன்று பிறந்த ஆண் குழந்தை காணாமல் போனதால் சந்தையூர் கிராம செவிலியர் காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் 27.08.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி பேரையூர் வட்ட காவல் ஆய்வாளர் மதனகலா தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை ஈரோடு, விருதுநகர், பெங்களூர் ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு 28.08.2023 அன்று பெங்களூரில் தேஜஸ்வரி வயது 36 என்பவரிடம் குழந்தை இருப்பதை கண்டுபிடித்து 16 நாள் வயதுடைய குழந்தை மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 10 குற்றவாளிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திலேயே குழந்தையை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையை சேர்ந்த .காவல் ஆய்வாளர் மதனகலா, பேரையூர் வட்ட காவல், 2. சார்பு ஆய்வாளர் ஜெயம்பாண்டியன், பேரையூர் காவல் நிலையம், 3.த.கா.ராஜேஷ்கண்ணா, சேடபட்டி காவல் நிலையம், 4. மு.நி.கா. முத்து மாணிக்கம், பேரையூர் காவல் நிலையம், 5. பெ.மு.நி.கா. குருரத்தினம், பேரையூர் காவல் நிலையம் ஆகியோர்களை காவல்துறை தலைமை இயக்குனர் தலைமையகம் அழைத்து தனிப்படையினருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
0 Comments