கோயம்புத்தூர் – செப் -22,2023
newz – webteam
போலி ரேஷன் கார்டு தயாரித்த நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்…
கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தேவராஜன் மகள் செல்வி (48) என்பவர் தமிழ் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக அளித்த புகாரின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப.,உத்தரவிட்டதன் பேரில், அன்னூர் காவல் துறையினர் அன்று போலியாக குடும்ப அட்டைகளை தயார் செய்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் அமுல் ஆண்ட்ரூஸ்(28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லேப்டாப்-1, பிரிண்டர்-1, அச்சிடப்பட்ட போலி ரேஷன் கார்டு-140 மற்றும் அச்சிடப்படாத போலி ரேஷன் கார்டு சுமார் 800-யை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
add
0 Comments