நவ – 27,2025
Newz – Webteam

கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடித்து கைது… கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி
கடந்த 2024 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை சேர்ந்த பால்ராஜ் 33 என்பவர் நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை அருகில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக கோட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கண்டுபிடிக்கப்படாமல் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS உத்தரவிட்டார்
உத்தரவின்படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் மேற்பார்வையில், கோட்டார் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் பச்சைமால் உதவி ஆய்வாளர் அஜய் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தனிப்படையின் தீவிர விசாரணையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையிலும், தொழில்நுட்ப உதவியுடன் கேரள மாநிலத்தை சேர்ந்த திருவல்லம் வடக்கேகொல்லம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவரது மகன் சுமேஷ் என்பவர் பால்ராஜை கொலை செய்தது என்பது தனிப்படையினரின் விசாரணையில் தெரியவந்தது.
சிறப்பாக செயல்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கின் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

0 Comments