சென்னை – ஜீன் ,13,2024
Newz -webteam
சிறப்பு அகில இந்திய அளவிலான காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி(மகளிர்) -2024
தமிழ்நாடு காவல்துறை, 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலரது பொன்விழாவினை (1973-2023) பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடியது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா 17.03.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
காவல் துறையில் மகளிர் காவலர்கள் முக்கியப் பங்காற்றுவதுடன், மாநில தேசிய சர்வதேச அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் காவல் துறையில் மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, மாநில அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் மகளிர்காவலர்களுக்கான அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தும் பொறுப்பு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியை நடத்துவதற்கு, காவல் துறை தலைமை இயக்குநர் தமிழ்நாடு அரசின் மூலம் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதியைப் பெற்றுத் தருமாறு கோரப்பட்டது.
அதன்படி, 2024 ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை போட்டியை நடத்த அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆண் மற்றும் மகளிருக்கான அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி ஆண்டுதோறும் மாநில காவல்துறை அல்லது மத்திய ஆயுதப் படைகள் மூலமாக புதுதில்லி அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியத்தின் கீழ், காவல்துறை அமைப்புகள் மத்திய ஆயுதப் படைகளில் உள்ள ஆயுதங்கள் குறித்த மதிப்பிடுதல் மற்றும் தொழில்முறை திறன்களைமேம்படுத்துதலுக்கான நோக்கத்துடன் அகில இந்திய காவல்துறைக் கடமைப் போட்டியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி 15.06.2024 முதல் 20.06.2024 வரை தமிழ்நாடு காவல்துறையினரால் ‘மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி’ செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெறும்.
இதில், 13 விதமான போட்டிகள்பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல்/ரிவால்வர் (4 போட்டிகள்) & கார்பைன்/ஸ்டென்கன் (4 போட்டிகள்) பிரிவுகளில் அகில இந்தியகாவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நடத்தப்படும். இதில் காவல்துறை அமைப்புகள் மத்தியஆயுதப்படைகளின் 30 அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட 454 மகளிர் காவலர்கள் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவிட, அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் 176 பேர் பங்கேற்க உள்ளனர்.
மேற்படி நிகழ்வுகள் யூடியுபில் நேரடியாக ஒளிபரப்பப்படும். நேரடி ஒளிபரப்புக்கான இணைப்பு முகவரி மக்கள் தொடர்பு அதிகாரிகளால் தெரிவிக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் அலுவலகம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மக்கள் தொடர்பு அதிகாரிகள் மூலம் போக்குவரத்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். மேற்படி அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.இளவரசி, துணை இயக்குநர்,
மக்கள் தொடர்பு அதிகாரி, காவல்துறை தலைமையகம், சென்னை
(9952038502)ரியாசுதீன், உதவி ஆணையர், மக்கள் தொடர்பு அதிகாரி, தாம்பரம். (9840401199)விஜய ராமுலு, உதவி ஆணையர்,மக்கள் தொடர்பு அதிகாரி, சென்னை பெருநகர காவல் (9790969699)
0 Comments