திருப்பத்தூர் -ஜீன் -14,2024
Newz -webteam


திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதை இல்லா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்கள் உதயேந்திரம், பச்சூர், ஆலங்காயம், புத்தகரம், கரம்பூர், மாடப்பள்ளி, தாசிரியப்பனூர், விண்ணமங்கலம், திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது
இப்போட்டிகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அணியினர் 4 -முதல் பரிசையும், 3 – இரண்டாம் பரிசையும், 2- மூன்றாம் பரிசையும் வென்றுள்ளனர் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS. அவர்கள் இன்று நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
0 Comments