திருநெல்வேலி -ஜீன் -14,2024
Newz -webteam
அரசம்மாள், 59 வயது, காது கேளாதோர் வாய் பேச முடியாது. அவருடைய கணவரும் காது கேளாது. வாய் பேச முடியாது. இவர்களுக்கு ஒரு மகன். அவர் நக்கீரன் பத்திரிக்கையில் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். அரசம்மாள் குலவணிகர்புரத்தில் அமைந்துள்ள காது கேளாது திருசபை பேக்கரியில் உதவியாளராக பணியாற்றுகிறார்.
10.06.2024 அன்று அரசம்மாள் தாழையுத்தில் உள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்று திரும்பும்போது மணியளவில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தார். பின்பு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர் உறவினர்கள். அவரை பரிசோதித்த மூளை நரம்பியல் நிபுணர் அவருக்கு மூளை இரத்த கசிவு உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். அதன்பின் விளைவுகளையும் உறவினர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினர். பின்பு உறவினர் ஒப்புதல் பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காததால் மூளை செயல்பாடு குறைந்து 13.06.2024 அன்று மூளை செயலிழப்பு ஏற்பட்டது. அதற்கான பரிசோதனைகள் செய்தபின் உறவினர்களிடம் எடுத்துரைத்தனர்.
மூளை செயல்பாடு இல்லை என்று அதன்பின்பு அரசம்மாள் உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். உறவினர்கள் ஒப்புதல் அளித்தபின்பு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் கருவிழிகள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கும் தானமாக அளிக்கப்பட்டது
மேலும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவே பெண்
உறுப்பு கொடையாளி மற்றும் மாற்றுத் திறனாளி உறுப்புகொடையாளியும் இதுவே முதல்முறையாகும்.
0 Comments