திருநெல்வேலி – ஜீன் – 16,2023
newz – webteam
திருநெல்வேலி சரசு காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார், இ.கா.ப.14ம்தேதி சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் துறை உயர்அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதி போட்டியில் 3 பிரிவுகளில், 3 தங்க பதக்கங்கள் பெற்றுள்ளார்.
சென்னை, மருதம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 14.06.2023 அன்று நடைபெற்ற மாநில அளவிலான காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி ஈடும் இறுதி போட்டியில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ்குமார், இ.கா.ப., பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில் முதல் பரிசான தங்க பதக்கமும், ரைபிள் பிரிவிற்கான போட்டியில் முதல் பரிசான தங்க பதக்கமும், இவ்விரண்டு போட்டிகளிலும் ஒட்டு மொந்த சாம்பியனாக தங்க பதக்கமும், ஆக மொத்தம் மூன்று தங்க பதக்கங்கள் பெற்றுள்ளார். மேற்காணும் மூன்று தங்க பதக்கங்கள் மற்றும் மூன்று சான்றிதழ்களை காவல்துறை தலைமை இயக்குநர சென்னை முனைவர், செ. சைலேந்திர பாபு, இ.கா. ப வழங்கி கொளரவித்தார்.
0 Comments