திருப்பத்தூர் – ஜீன் -16,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், IPS., தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுதாகர்லசாரி அவர்களுடன் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றங்கள் தடுப்பதை பற்றிய கலந்தாய்வு கூட்டம் (Inter-State Border Coordination Meeting) நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
- குற்ற செயல்களில் ஈடுபடும் தமிழக மற்றும் ஆந்திர மாநில குற்றவாளிகளை பற்றிய தகவல் பரிமாற்றம்.
- இரு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் ஒருங்கிணைந்து குற்ற தடுப்பு சம்பந்தமான தகவல்களை பரிமாற்றம் செய்து விரைவாக குற்றங்களை தடுக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.
- கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் பற்றிய தகவல் பரிமாற்றம்.
- திருட்டு, வழிபறி குற்றங்கள் மற்றும் ரவுடிகள் பற்றியும்.
- கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்துப்பவர்கள் தொடர்பாகவும்.
6.நிலுவையில் உள்ள பிணையில் விட கூடாத குற்றங்கள் (NBW) பற்றியும்.
7.சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும் மற்றும் ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments