நெல்லை மாநகரம் – செப் -13,2023
newz – kompanraj…
நெல்லை மாநகர கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் நியமனம்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மேற்பார்வையில் மாநகரமானது நெல்லை மேற்கு, கிழக்கு என இரண்டு சரகங்களாக பிரிக்கப்பட்டு
சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றங்களை தடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லை மாநகர் மேற்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக சரவணகுமார் இருந்து வருகிறார் கிழக்கு துணை கமிஷனராக சீனிவாசன்
பொறுப்பு்வகித்து வந்தார். அதேபோல் தலைமையிட துணை கமிஷனராக அனிதாவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவியிடம் காலியாக இருந்தது அந்த பொறுப்பை தலைமையிட துணை கமிஷனர் அனிதா கூடுதலாக கவனித்து வந்தார் காலியாக இருந்த காவல்துறை துணை கமிஷனர் பதவிக்கு உடனடியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் அதன்படி தற்போது நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனராக ஆதாஷ் பச்சேரா நியமிக்கப்பட்டுள்ளார் இவர் சென்னையில் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு எஸ்பியாக பணியாற்றி வந்தார் தற்போது இவர் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
0 Comments