திருநெல்வேலி – செப் -24,2023
newz – webteam
உலக இருதய தினத்தையொட்டி தனியார் மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி – மாவட்ட ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி, செப்டம்பர் 24 – உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இருதய பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவேரி மருத்துவமனை சார்பில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன் இ ஆ ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர துணை மேயர் கே. ஆர். ராஜு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி டாக்டர் சி. ரேவதி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் கே. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரி மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். மாரத்தான் போட்டி இரண்டு பிரிவுகளாக 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என நடைபெற்றது. இப்போட்டி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இருந்து துவங்கி குறிப்பிட்ட பாதையை கடந்து பின்னர் மருத்துவக் கல்லூரி மைதானம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் 2300 பேர் மற்றும் பெண்கள் 2700 பேர் என மொத்தம்5000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.
10 கி.மீ போட்டி – ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் விபரம்- முதல் பரிசு எஸ் நிகில் குமார் ரூ. 12,500 இரண்டாம் பரிசு எம். ரெங்கராஜ் ரூ. 10,000 மூன்றாம் பரிசு எம். அஜித் குமார் ரூ.7,500
10 கி.மீ போட்டி- பெண்கள் பிரிவு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்கள்
முதல் பரிசு எஸ். ஐஸ்வர்யா ரூ. 12,500, இரண்டாம் பரிசு எஸ்.எம். ஹிதாயத் பவுசியா ரூ. 10,000, மூன்றாம் பரிசு சி. வேணிகா ரூ. 7,500
5 கி.மீ போட்டி- ஆண்கள் பிரிவில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்கள் விபரம். முதல் பரிசு மூர்த்தி ரூ. 10,000 இரண்டாம் பரிசு ஸ்ரீனிவாசன் ரூ. 7,500 மூன்றாம் பரிசு முத்து இசக்கி ரூ. 5,000
5 கி.மீ போட்டி – பெண்கள் பிரிவில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்கள் விவரம்.
முதல் பரிசு ஆர். ரம்யா ரூ.10,000 இரண்டாம் பரிசு எம்.சௌமியா ரூ. 7,500 மூன்றாம் பரிசு எம். பாக்கியவதி ரூ. 5,000. வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையிலேயே பரிசுத்தொகை வழங்கப்பட்டது. விழாவில் காவேரி மருத்துவமனை டாக்டர் மகபூப் சுபுகாணி, டாக்டர் லட்சுமணன், டாக்டர் டி.ஜே. பிரபாகர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Add
0 Comments