திருநெல்வேலி -அக் -13,2024
Newz -webteam
மந்திரமூர்த்தி நைனார் வயது 50 இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாத்தான்குளம் அருகில் உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர். மனைவி மற்றும் 11 வயது நிரம்பிய மகன் உள்ளார். இவர் திசையன்விளையில் உள்ள டிம்பர் டிப்போவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக கடந்த 10. 10. 2024 அன்று திசையன்விளைக்கு சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவரை திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மற்றும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் மோசமான நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்
மற்றும் மூளை செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனைகள் அறிக்கையில் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை அவருடைய உறவினரிடம் மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். பின்பு தாமாக முன்வந்து அவருடைய உறவினர்கள் கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், கருவிழிகள் தானமாக அளிப்பதற்கு முன் வந்தனர். 12.10.2024 அன்று அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு மந்திரமூர்த்தி நைனார் உடலை தசரா பண்டிகை ழுன்னிட்டு அவரது உறவினர்கள் வேண்டுகோள் படி அவரது உடலை 13.10.2024 அன்று காலை சுமார் 10 மணியளவில் பெற்று கொள்வதாக கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இடம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி புதிய உடற்கூறரய்வு அரங்கம்.
0 Comments