மதுரை – 28,2025
Newz -webteam
போலீஸ் அக்கா திட்டம் துவக்க விழா இன்று மதுரை மாநகர காவல் துறையில் திருப்பரங்குன்றம் தியாகராஜா இன்ஜினியரிங் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை காவல் ஆணையர்
ஜெ.லோகநாதன் ஐபிஎஸ் துவக்கி வைத்தார் .
இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் எல் அசோக்குமார் மற்றும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு தெற்கு மற்றும் கூடுதல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆணையர் வரதட்சணை தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போலீஸ் அக்கா திட்டமானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் சைபர் குற்றங்கள் தன்னுடல் பேணுதல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான குற்றங்களை வெளியில் சொல்ல முடியாத நிலை ஏற்படும் போது அதற்காக ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட போலீஸ் அக்கா காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு உடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் மேலும் மதுரை மாநகரில் இந்த போலீஸ் அக்கா திட்டத்திற்கு 91 பெண் காவலர்களை நியமித்து அதற்கென சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு போலீஸ் அக்காவாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த போலீஸ் அக்கா திட்டத்தில் மதுரை மாநகரில் உள்ள 230 பள்ளிகள் மற்றும் 33 கல்லூரிகளில் மொத்தம் 263 இந்தத் திட்டம்
இன்றிலிருந்து செயல்பாட்டிற்கு வரும் எனவும் திட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அறிவிப்புப் பணிகளில் இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட வேண்டும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்தார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து இந்த போலீஸ் அக்கா திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments