


திருநெல்வேலி – மார்ச் -08,2025
Newz – Webteam
திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்..! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்..! என்ற தலைப்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் பாளை வ.உ.சி மைதானத்தில் தொடங்கி பாளை பேருந்து நிலையம், TVMCH ரௌண்டான, ஆட்சியர் முகாம் அலுவலகம், பாளை பேருந்து நிலையம் வழியாக வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.
மாரத்தான் ஒட்டப்பந்தயத்தை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தொடங்கி வைத்தார்கள். உடன் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) விஜயகுமார் திருநெல்வேலி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் துறை அதிகாரிகள் மற்றும், மாநகர காவல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியில் பங்கு பெற்றார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் 181 என்ற எண்ணை முன்மொழியும் விதமாக பெண்கள் குழுவாக 181 வடிவத்தில் தங்களை பிரதிபலித்தனர்.
0 Comments