தூத்துக்குடி -ஆகஸ்ட் -23,2024
Newz -webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் அறிவிப்பு.
வரும் 07.09.2024 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் சிலை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி ஏற்கனவே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும், மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். நிறுவப்படும் சிலைகள் வழக்கம்போல் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க கூடாது.
சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்க கூடாது (நீதிமன்ற ஆணைப்படி). வழக்கம்போல் ஒவ்வொரு சிலைகளுக்கும் 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்க வேண்டும், சிலை இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும், விநாயகர் சிலைகள் நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தெரிவித்துள்ளார்.
0 Comments