திருவாரூர் – நவ -,25,2023
newz – webteam
திருவாரூர் மாவட்டம்.
பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல், விற்பனையில் ஈடுபட்டவர் கைது,
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அடியோடு ஒழிக்கும் பொருட்டு காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவற்றை தொடர் ஆய்வு மேற்கொண்டும், மேற்கண்ட கடைகளில் சட்ட விரோதமாக பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்ளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அவர்களுக்கு மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் வலங்கைமான் காவல் சரக பகுதியில் உள்ள குடமுருட்டி பாலம் அருகில் வாகன சோதனை செய்த போது கும்பகோனம் அஹ்ரஹார சார்ந்த முனுசாமி மகன் ராஜேஷ், 31, என்பவர் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகளுக்கு மொத்த விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் பான்மசாலா-405 பாக்கெட், ஹேன்ஸ்-456 பாக்கெட், கூல்லிப்-300 பாக்கெட்டுகளை கொண்டு வந்தவரை வலங்கைமான் தனிப்பிரிவு தலைமைக்காவலர் அறிவழகன், ஹரிதுவாரமங்கலம் தனிப்பிரிவு தலைமைக்காவலர்.சரவணன் மற்றும் தலைமைக்காவலர் சந்திரமோகன் ஆகியோர்கள் வளைத்து பிடித்து அவர் சட்டவிரோதமாக குட்கா, பான்மசலா விற்பனை செய்து வைத்திருந்த தொகை ரூ.1,86,190/-யும் கைப்பற்றி மேற்படி எதிரி ராஜேஷ், த/பெ. முனுசாமி மற்றும் அவர் வைத்திருந்த இருசக்கர வாகனம், மற்றும் பணம் ஆகியவற்றை வலங்கைமான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பான்மசாலா மற்றும் குட்கா பொருட்களை சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த நபரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட தீவிர ஆய்வில் நன்னிலம் காவல் சரகம், காக்காகோட்டூரில் உள்ள அபிராமி மளிகை ஜெராக்ஸ் கடை, குடவாசல் காவல் சரகத்திலுள்ள மலர் மளிகை மற்றும் மன்னார்குடி காவல் சரகம் கோபாலசமுத்திரம்
வடக்கு தெருவில் உள்ள G.S.K மளிகை கடை ஆகியவற்றில் தொடர்ந்து பான்மசாலா மற்றும்குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை உறுதி செய்த சுகாதார
ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் கொண்ட சிறப்பு படையினர் மேற்கண்ட கடைகளுக்குசீல் வைத்தனர்.
மேலும், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பான்மசாலாமற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வரை நடவடிக்கைதொடர்ரும் எனவும், இது தொடர்பாக மாவட்டம் முழுவதிலும் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடை உரிமையாளர்களுடன் அந்தந்த உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் சரக பொறுப்பு அதிகாரிகள் நேற்று கந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கலந்தாய்வு கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை யாரேனும் கடைகளில் வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடைக்கும் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும் பள்ளி மற்றும் கல்லுாரி அருகாமையில் உள்ள பகுதிகளில் மாணவர்களின் எதிர்கால நலனை பாதிக்கும் வகையில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் எவரேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்
0 Comments