புதுக்கோட்டை – நவ – 25,2023
newz – webteam
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்நிலையத்தில் 20ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் அழைத்து செல்லும் போது தப்பித்து தலைமறைவாக இருந்த குற்றவாளி தென்னரசு என்பரை அறந்தாங்கி காவல் ஆள்வாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே போன்று மற்றொரு வழக்கிலும் சிலட்டூரை சேர்ந்த சிதம்பரம் என்பவர் 27 ஆண்டுகளாக வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் தப்பித்து வெளிநாட்டில் இருந்து வந்தார்.அவர் ஊர் வந்து இருக்கும் செய்தியை ரகசியமாக சேகரித்த காவல்ஆய்வாளர் முத்துக்குமார் அவரை கைது செய்ய உள்ளதை அறிந்த சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்து நீதிமன்ற நிபந்தையில் வெளியில் வந்து உள்ளார்.காவல் ஆய்வாளர் முத்துக்குமாரின் அதிரடி நடவடிக்கை கண்ட பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
0 Comments