திருவாரூர் – நவ -25,2023
newz – webteam
திருவாரூர் மாவட்டம் – பான் மசாலா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி ஆய்வு.
தமிழக டிஜிபி உத்தரவின் படி பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத புகையிலை
மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் சிறப்பு வேட்டை
நடத்தப்பட்டு அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஜெயக்குமார், திருவாரூர் பகுதியில் உள்ள பெட்டி கடையில் பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என நேரடியாக திடீர் ஆய்வு செய்தார்
பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும் வரும் காலங்களில் பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினார்
0 Comments