நாகபட்டினம் – டிச -26,2023
Newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப உத்தரவின் பேரில் புத்தாண்டு மற்றும் பொங்கள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஸ்ட்ராமிங் ஆபரேஷனில் கள்ளச்சாராய விற்பனை, தடை செய்யபட்ட லாட்டரி விற்பனை, தடை செய்யபட்ட ஆதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 85 குற்றவாளிகள் கைது, 6000 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல், சட்ட விரோதமாக வாகனங்களை இயக்கிய 61 நபர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப உத்தாவின் பேரில் புத்தாண்டு மற்றும் பொங்கள் தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் எஸ்ட்ராமிங் ஆபரேசன் என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் இன்று நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டுவரும் முக்கிய குற்றவாளிகளான அந்தோனிராஜ், பீமா என்கிற முரசொலிமாறன, ஜிலாக்கி என்கிற மாரியப்பன், கேடி கண்ணன் என்கிற கண்ணள், ப்ளாக்னென் என்கிற முகமது மைதீன், ஜார்லஸ் போன்ற முக்கிய குற்றவாளிகள் உட்பட 80 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 6000 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 90 ML அளவுள்ள 350 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 180 ML அளவும் 90 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இரண்டு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் தடை செய்யபட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்துள்ளனர். அதே போல் தடை செய்பபட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங், இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் அந்த, அந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பபாளர்களின் தலைமையில் 21 இடங்களில் சுமார் 150க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவனங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், தலை கவசம் இல்லாமல் சென்ற வாகன ஒட்டிகள், அதி வேகமாக இயக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் மது போதையில் வாகனங்களை ஒட்டியவர்கள் என 61 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சிறப்புடன் செயல்பட்ட
மாவட்ட காவல் துறையிரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப
பாரட்டினார்.போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும்
ஈடுபட்டால் உங்கள் எஸ்.பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில்
புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.
0 Comments