நாகப்பட்டினம் – ஜீலை – 19,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப
உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் கள்ளச்சாராய ஊரல், கஞ்சா, கள்ள நோட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சீட்டு விளையாட்டு, போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்தும், மேன்மேலும் குற்ற செயலில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட காவல்துறையினரின் பணியை பாராட்டு வகையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்து கௌரவித்தார்
0 Comments