திருவாரூர் – அக் -22,2023
newz – webteam
வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்ச்சி செய்தவர்கள் அதிரடியாக கைது,
திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, வடகாடு பகுதியில் வசித்து வரும் வைரக்கண்ணு பொதுயுடைமூர்த்தி என்பவருடைய மகன் சஞ்சய்காந்தி வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், மேற்கண்ட வைரக்கண்ணு தனது மருமகள் ஜெயலெட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணிஅளவில் வீட்டில் இருக்கும்போது, வீட்டிற்கு வெளியே நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே மேற்கண்ட வைரக்கண்ணு வெளியே வந்து பார்த்தபோது முகமுடி அணிந்த சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் மற்றும் முகமுடி அனியாத 2 நபர்கள் நின்றுள்ளனர். அப்போது முகமுடி அணிந்த இரண்டு நபர்கள் வைரக்கண்ணுய பிடித்துகொள்ள, முகமூடி அணிந்த மற்ற இருவரும் வைரக்கண்ணுவின் வீட்டிற்குள் சென்று அவரது மருமகளிடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த நகைகைள பறிக்க முயற்ச்சி செய்துள்ளனர். அப்போது வைரக்கண்ணு மற்றும் ஜெயலெட்சுமி சத்தம்போட அவர்களை விட்டுவீட்டு மேற்கன்ட நபர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றுள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்த முத்துப்பேட்டை (பொறுப்பு) துணைக்காவல் கண்காணிப்பாளர் .சரவணன் முத்துப்பேட்டை உட்கோட்ட தனிப்படையினர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விசாரனை மேற்கொண்டுள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் இருசக்கரவாகளத்தில் தப்பி சென்ற வழிதடங்களில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். நாச்சிகுளம் ஆவின் பாலகத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடுவதும் அவர்கள் தொலைபேசி பயன்படுந்துவதும் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் உள்ள CCTV காட்சிகள தொடர்ந்து அய்வு செய்ததில் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களான பிரபிக்குமார் 2.கார்த்திக் ராஜ 19, 3.ராஜேஷ், 4.சிலளேஸ்/ 23 ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட நான்கு நபர்களிடமும் விசாரனை மேற்கொண்டதில் இவர்கள் நான்கு பேரும் முத்துப்பேட்டை பெருகவாழ்ந்தான் பகுதியில் கொத்தனார் வேலை மற்றும் சென்ட்ரிங் வேலை செய்துவருவதாகவும், இரவு நேரங்களில் வடகாடு பகுதியில் உள்ள காட்டின் அருகே சென்று தொடர்ந்து மது அருந்துவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது மேற்கண்ட வைரக்கன்னுவின் வீடு தனியாக இருப்பதும் அந்த வீட்டை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயற்ச்சி செய்ததாக கூறியுள்ளனர் . மேற்கண்ட கொள்ளை முயற்ச்சியில் தொடர்புடைய நபர்களை சிறப்பாக செய்யப்பட்டு இரவோடு இரவாக அனைத்து நபர்களை கைது செய்து முத்துப்பேட்டை (பொறுப்பு) துணைக்காவல் கனர்காணிப்பாளர் சரவணன். மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்
0 Comments